மூடப்பட்ட பாக்கியாவின் கேன்டீன்... பழனிச்சாமி செய்த தரமான சம்பவம்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பொருட்காட்சி ஆர்டரை பெற்றுள்ளதால், வில்லன் செய்த சதியால் கேன்டீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.
இந்நிலையில் பாக்கியா பொருட்காட்சியில் சமையல் ஆர்டரை வாங்கி அசத்தினார். அந்த மகிழ்ச்சி மறைவதற்கு அவரது கேன்டீனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடித்த பழனிச்சாமி
தற்போது கேன்டீன் ஆர்டரை பெற முடியாத கோபத்தில் வில்லன் ஒருவன் செய்த சதியால் பாக்கியாவின் கேன்டீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டுபிடிப்பதற்கு பழனிச்சாமி மற்றும் கதிர் இருவரும் ஆபிஷர் ஒருவரை சென்று சந்தித்துள்ளனர். அப்பொழுது சதி செய்தவர் யார் என்பதை கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரித்து உண்மையை வரவழைத்து மீண்டும் பாக்கியாவை கேன்டீனுக்குள் நுழைய வைக்கவுள்ளார் பழனிச்சாமி.
பழனிச்சாமி மற்றும் பாக்கியாவின் ஜோடி மிக அழகாக உள்ள நிலையில், ரசிகர்கள் இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |