சோகத்தில் இருந்த பாக்கியா! பழனிச்சாமி வீடியோ காலில் கொடுத்த ஷாக்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு ராதிகா கேண்டின் வேலையில் நெருக்கடி கொடுத்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.
சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இவருக்கே மக்களின் வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.
பழனிச்சாமியுடன் பாக்கியா
இந்நிலையில் கோபி வீட்டு பணத்திற்கு நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், இதற்காக பாக்கியா கடுமையாக உழைத்து வருவதுடன், ஆங்கிலம் கற்க வகுப்பிற்கும் சென்றுள்ளார்.
அங்கு பழனிச்சாமி என்ற பெயரில் நடிகர் ரஞ்சித் அறிமுகமாகியுள்ளார். பாக்கியாவின் ஒவ்வொரு செயலையும் கவனித்து பாராட்டி தள்ளுவதுடன், பாக்கியாவிற்கு முழு ஆதரவை தெரிவித்து வருகின்றார்.
நாளுக்கு இவர்களின் நட்பின் அழகு அதிகரித்து வரும் நிலையில் கோபி வயிற்றெரிச்சலில் காணப்படுகின்றார். இந்நிலையில் ராதிகா கொடுக்கும் நெருக்கடியால் தவித்த பாக்கியாவிற்கு, பழனிச்சாமி அவரை சமாதானப்படுத்தி, தன்னம்பிக்கையை கொடுத்து வருகின்றார்.
மேலும் பழனிச்சாமிக்கு கேக் நன்றாக செய்ய தெரியும் என்பதால், பாக்கியாவிற்கு வீடியோ காலில் வகுப்பு எடுத்து அசத்தியுள்ளார்.
