கம்பீரமாக கேன்டீனை திரும்ப பெற்ற பாக்கியா... நடுநடுங்க வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கேன்டீனை மூடவைத்த வில்லனிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.
இந்நிலையில் பாக்கியா பொருட்காட்சியில் சமையல் ஆர்டரை வாங்கி அசத்தினார். அந்த மகிழ்ச்சி மறைவதற்கு அவரது கேன்டீனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சரமாரியாக கேள்வி எழுப்பிய பாக்கியா
தற்போது கேன்டீன் ஆர்டரை பெற முடியாத கோபத்தில் வில்லன் ஒருவன் செய்த சதியால் பாக்கியாவின் கேன்டீன் சீல் வைக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை வந்து ஆய்வு மேற்கொண்ட போது, அனைத்தும் சரியாகவே இருக்கின்றது என்றும் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இவர்கள் கேன்டீன் நடத்தி வருவதாக அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
இதனிடையே கொந்தளித்த வில்லனிடம் பாக்கியா, பொலிசாரை போன்று கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் அவனிடம் ஆதரத்தை கேட்டும் நெருக்கடி கொடுத்து, இறுதியில் தங்களது கேன்டீன் மீது எந்தவொரு பிரச்சினை இல்லை என்பதை அதிகாரிகளையே கூற வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |