ஆக்ரோஷத்தின் உச்சத்தில் பாக்கியா... தெறிக்கவிட்ட ப்ரொமோ காட்சி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை கைது செய்யப்படும் இறுதி நொடியில் பழனிச்சாமி அவரை காப்பாற்றிய காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்த கோபி பாக்கியாவின் சவாலில் தோல்வியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
இனியா சேர்ந்த கல்லூரியில் பாக்கியாவும் கல்லூரியில் சேர்ந்துள்ள நிலையில், தற்போது இனியாவை படிப்பு விடயமாக சுற்றுலா அழைத்துச் சென்று அங்கு பல சிக்கல்களை சந்தித்து மீண்டு வந்துள்ளார்.
நெருப்பாக மாறிய பாக்கியா
இந்நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் பாக்கியாவின் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிடவே, இதனால் பொலிசிடம் மாட்டிக்கொள்கின்றார். வீட்டில்் இருக்கும் லைசன்ஸையும் கோபி எடுத்து உடைத்து போடுகின்றார்.
இது பழனிசாமி கையில் கிடைத்து பின்பு பாக்கியாவை காப்பாற்றியுள்ளார். கோபி தனது கையில் வைத்திருந்த கள்ளச்சாவியை போட்டு வீட்டை திறந்துள்ளததைக் கேட்ட பாக்கியா சீறி எழுந்துள்ளார்.
நேரடியாக கோபியின் வீட்டிற்கே சென்று தவிடுபொடியாக்கியுள்ளார். மேலும் ராதிகாவிடமும் தனது பிரச்சினையைக் கூறி நெருப்பாக மாறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |