இந்த சீசனில் ரெட் கார்டு வாங்கி முதல் போட்டியாளர்! அடுத்து நடந்த அதிரடி திருப்பம் - இனி பூகம்பமே வெடிக்க போகின்றது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் அசீமிற்கு ரெட் கார்ட் கொடுத்த நிலையில் அவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அங்கு எதிர்ப்பாராத பல திருப்பங்கள் நடைபெற்றது.
இன்று உலகநாயகன் வந்ததும் ரெட் கார்டு விளையாட்டை அசீம் - ஆயிஷா பிரச்சனையை வைத்து விளையாடிவிட்டார்.
ரெட் கார்டு விளையாட்டை ஆரம்பித்த கமல்
அசல் கோலார் மற்றும் தனலட்சுமியை தவிர்த்து மற்ற அத்தனை போட்டியாளர்களும் அசீம் உள்பட அனைவரும் அசீமுக்கே ரெட் கார்டு கொடுத்தனர்.
அசல் கோலார் - தனலட்சுமிக்கும், தனலட்சுமி - அசல் கோலாருக்கும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை காரணமாக மாற்றி மாற்றி கொடுத்துக் கொண்டனர்.
தனக்குத் தானே ரெட் கார்டை கொடுத்து விட்டு இதற்கு மேல் தான் கோபமே பட மாட்டேன் என்று இறுதியில் அசீம் கூறினார். அவரே மன்னிப்பு கேட்டு தனக்குத் தானே ரெட் கார்டு கொடுத்துக் கொண்டதால் கமல்ஹாசனும் அசீமை மன்னித்து விட்டார்.
ரெட் கார்டுடன் இந்த வாரம் யாரும் வெளியேற வில்லை. என்ன தான் அசீம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வில்லை என்றாலும் தனக்கு ரெட் கார்டு கொடுத்த அனைத்து போட்டியாளர் மீதும் அவருக்குள் கோபம் இருக்கும்.
இது அடுத்த வாரத்தில் பூகம்பமாக வெடிக்கும் என்பது மட்டும் உண்மை.