மதுமிதாவுக்கு இத்தனை வயதா? பிறந்தநாளை யாருடன் கொண்டாடி இருக்காங்கன்னு பாருங்க
எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை மதுமிதா நண்பர்களுடன் தனது பிறந்தநாளை அமோகமாக கொண்டாடி சமூக வலைத்தளப்பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எதிர் நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான்.
இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஏனென்றால் சீரியல் துவங்கிய நாளில் இருந்து இறுதிவரை விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.
தற்போது முதல் சீனன் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது எதிர் நீச்சல் 2 ஆம் பாகமும் மக்களின் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது.
முதல் சீசனில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துவந்த மதுமிதா 2வது சீசனில் நடிக்கவில்லை.அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
சன் தொலைக்காட்சியை தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சியிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
26 வயதை எட்டியுள்ள நிலையில், அய்யனார் துணை சீரியல் குழுவுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
