முடி உதிர்வை தடுக்கணுமா? இந்த பானத்தை ட்ரை பண்ணி பாருங்க
முடி உதிர்வுக்கு பல சிகிச்சைகளை நாடி அதில் பலன் கிடைக்காமல் மனச்சோர்வுடன் சிலர் இருப்பீர்கள்.
தலையை சீவும் போது தரையில் நிறைய முடி கொட்டுகிறது. அதற்கான காரணம் முடி தனது சக்தியை பெறுவதற்கான ஊட்டச்சத்து கிடைக்காததே.
அதனால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆயுர்வேத பானத்தை தயாரிக்க போகிறோம்.
இந்த வைத்தியம் உண்மையில் உங்களுக்கு முடி உதிர்வதை குறைக்க உதவும். நீங்கள் எவ்வளவு சிகிச்சைகளை செய்து இருந்தாலும் இயற்கை மருத்துவம் சிறந்த பலனை தரும்.
இந்த பதிவில் முடி உதிர்வை குறைக்கும் பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.
ஆயுள்வேத பானம்
ஒரு கையளவு கறிவேப்பிலை மற்றும் சிறிதாய் நறுக்கிய இஞ்சி, இரண்டு நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்து கொள்ளவும்.
பின்னர் நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கி கொள்ளுங்கள், பின்னர் இதை அனைத்தையும் ஒரு அரைப்பானில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
இதை ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உண்மையில் நல்ல பலன் கிடைக்கும்.
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற வைட்டமின்களும், முடி வளர்ச்சிக்கும் வலிமைக்கும் தேவையான இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் தூண்டுதல் பண்புகள் உள்ளன.நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இது உச்சந்தலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் இது இளநரையை கட்டுப்படுத்தும்.