அடிவயிற்று கொழுப்பு மற்றும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்கும் சக்திவாய்ந்த ஆயுர்வேத பானம்! தயாரிப்பு உள்ளே
ஒரு சில முக்கிய பானங்கள் ஒருவரின் உடல் பருமனை ஒரே மாதத்தில் குறைக்க கூடியதாம். இந்த பானங்களை தொடர்ந்து குடித்து வந்தாலே போதும்.
அவை என்னென்ன பானங்கள் என்பதையம், எவ்வாறு தயாரித்து குடிப்பது என்பதையும் இனி அறிந்து கொள்வோம்.
ஆளி விதை காஃபி தெரியுமா..?
உடல் எடையை குறைக்க உதவும் ஆயர்வேத முறையில் இந்த பானமும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.
முதலில் சூடான நீரில் 1 ஸ்பூன் காபியை கலந்து கொள்ளவும்.
அடுத்து அதனுடன் 1 ஸ்பூன் ஆளி விதை மற்றும் டார்க் சோகோலட் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு வடிகட்டி குடிக்கவும்.
தினமும் காலையில் இந்த காபியை குடித்து வந்தால் ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்.
இளநீர் மற்றும் அண்ணாச்சி பானம்...
செரிமான கோளாறை முற்றிலுமாக குணப்படுத்துவதில் இந்த பானம் முதல் இடத்தில் உள்ளது. இவை ரத்தம் உறைவதை தடுத்து, சீரான உடல் எடையை தருகிறது.
இந்த பானத்தை தயாரிக்க தேவையானவை
- இளநீர் 1 கப்
- அண்ணாச்சி 1/2 கப்
- கருஞ்சீரக விதைகள் 1/2 ஸ்பூன்
- சிறிது உப்பு
செய்முறை
முதலில் அண்ணாச்சி பழத்தை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் இளநீர், கருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, வடிகட்டி கொள்ளவும். இறுதியாக சிறிது உப்பை சேர்த்து தொடர்ந்து குடித்து வாருங்கள். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கி உடல் பருமன் குறைந்து விடும்.
எலுமிச்சை டீ
நீரை நன்றாக கொதிக்க விட்டு, பிறகு அவற்றில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு குடித்து வரலாம்.
இந்த ஆயுர்வேத பானம் அற்புதமான தீர்வை நமக்கு தரும். மேலும், உடலில் உள்ள கொழுப்புகளையும் இவை முற்றிலுமாக கரைக்க கூடிய ஆற்றல் பெற்றது.