சருமம் எப்பவும் அழகாக இருக்கணுமா? அப்போ இந்த மூலிகையை அவசியம் பயன்படுத்துங்க
பெண்கள் அழகாக இருப்பதற்கு என்ன வேண்டுமானாலும் பண்ணுவார்கள். அந்த வகையில் பல இரசாயனம் கலந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால் தோலின் ஆரோக்கியம் குன்றிய நிலையில் காணப்படுகின்றது. தினமும் ஏதாவது ஒரு இரசாயனத்தை பயன்படுத்தும் போது பக்கவிளைவாக வயதான தோற்றம் வந்து விடும்.
எனவே சருமத்தை சுருக்கங்கள் இல்லாமல் எப்பவும் இளமையாக வைத்து கொள்ளும் சில மூலிகைகளைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
மூலிகைகள்
1. துளசியில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு காரணம் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் தான்.
அஸ்வகந்தா சிறந்த மூலிகைப்பொருளாகும். இதில் இருக்கும் ஆன்டி ஃபங்கல் சருமத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகள் ஆகியவற்றை சரிசெய்வதோடு சருமத்தை இளமையாகவும் வனப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
2. ரோஸ்மேரி வாசனைப்பொருளாக பயன்படுத்தினாலும் இதில் முடியையும் சருமத்தையும் பாதுகாக்ககூடிய சிறந்த பலன்கள் காணப்படுகின்றது.
இது புற ஊதா கதிரின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது மற்றும் சருமத்தில் ஏற்படும் நுண்கோடுகளை குறைக்க உதவும். ஜின்ஜெங் என்னும் மூலிகைப்பொருள் சருமத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது.
3. குதிரைவால் மூலிகை என்று ஒரு மூலிகை உள்ளது. இதை சாப்பிட்டாலும் நன்மை தரும் மற்றும் வெளியில் இதை பயன்படுத்தினாலும் சருமப்பெலிவைப்பெறலாம்.
நொச்சியில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால் சருமச் சுருக்கங்கள் மற்றும் நுண் கோடுகளையும் வராமல் தடுக்கிறது.
ஆர்கேனோவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஃபிளவனாய்டுகள் சருமத்தல் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களின் சேதத்தைக் குறைத்து சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தைக் குறைக்கிறது.