ஆயுத பூஜை 2026: செல்வம் பெருக உங்க ராசிப்படி தானம் செய்ய வேண்டிய பொருட்கள்!
நவராத்திரி விழாவின் இறுதி நாளான மகா நவமி, பல இடங்களில் ஆயுத பூஜையாகவும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் துர்கா தேவியின் ஒன்பதாவது வடிவமான சித்திதாத்ரி தேவி வழிபடப்படுகிறார்.
பக்தர்களின் நம்பிக்கையின்படி, மகா நவமி நாளில் துர்கா தேவியை முறையாக வழிபட்டு, மனமுருகிப் பிரார்த்தனை செய்தால், அன்னை மனமகிழ்ந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். இதன் மூலம் வாழ்க்கையில் செழிப்பு, மகிழ்ச்சி, மனநிம்மதி மற்றும் விரும்பிய நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

[SUBNSYG ]
ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற சில குறிப்பிட்ட பொருட்களை மகா நவமி மற்றும் ஆயுத பூஜை நாளில் தானமாக வழங்குவது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில், இந்த மகா நவமி மற்றும் ஆயுத பூஜை நாளில் உங்கள் ராசிக்கு ஏற்றவாறு என்னென்ன பொருட்களைத் தானமாக வழங்களாம் என்பது குறி்த்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள்

மேஷம்: பெண்களுக்கு 21 ரூபாய் தானம் செய்வது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.
ரிஷபம்: அரிசி அல்லது பால் தானம் செய்வது வாழ்க்கைப் பிரச்சனைகளை நீக்கி வாழ்வில் செல்வ செழிப்பை அதிகரிக்கும்.
மிதுனம்: வெண்கலப் பாத்திரம் தானம் செய்வது நேர்மறை ஆற்றலையும் துர்கா தேவியின் அருளையும் தரும்.
கடகம்: தண்ணீர் தானம் செய்வது மகிழ்ச்சியையும் செழிப்பையும் அளிக்கும். சிம்மம்: கோதுமை தானம் செய்வது முயற்சிகளில் வெற்றியையும் செழிப்பையும் தரும்.
துலாம்: வெள்ளைக் கைக்குட்டை தானம் செய்வது பிரச்சனைகளைக் குறைத்து மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
விருச்சிகம்: வெல்லம் மற்றும் கொண்டைக்கடலை தானம் செய்வது துர்கா தேவியின் அருளையும் வளத்தையும் தரும்.
தனுசு: குங்குமப்பூ தானம் செய்வது அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்கும்.
மகரம்: ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது துர்கா தேவியின் அருளையும் நேர்மறை ஆற்றலையும் தரும்.
கும்பம்: ஏழை எளியோருக்கு இயன்ற அளவு தானம் செய்வது மகிழ்ச்சி, மன அமைதி மற்றும் துர்கா தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும்.
மீனம்: லட்டு அல்லது கடலைப்பருப்பு தானம் செய்வது துர்கா தேவியின் அருளால் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் என நம்பப்படுகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |