ஆத்தாடி .. lik பட விழாவில் நயன்தாரா அணிந்திருந்த வாட்ச் மட்டுமே இத்தனை லட்சமா!
7 ஸ்கிரீன் ஸுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா அணிந்திருந்த கைகடிகாரத்தின் விலை குறித்த தவவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா.இவரை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.

தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகின்றார். 20 வருடங்களுக்கும் மேல் சினிமா துறையில் தன்னை நாயகியாகவே தக்கவைத்துக்கொண்டுள்ள நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிக்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது.
தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா அறியப்படுகின்றார்.

இந்நிலையில், நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா அணிந்திருந்த கைகடிகாரத்தின் விலை குறித்த தவவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் அணிந்திருந்த வாச் Audemars Piguet பிரான்டின் Royal Oak Lady வாச் அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 45 தொடக்கம் 50 லட்சம் ஆகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |