அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய ‘அயன்’ பட வில்லன்! வைரலாகும் புகைப்படங்கள்
Ayan Villain Akashdeep Saigal's New Look goes viral : தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று சூர்யா நடிப்பில் வெளியான ‘அயன்’.
கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூர்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் வில்லன் கமலேஷ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாலிவுட் நடிகர் ஆகாஷ்தீப் சைகல்.

ரசிகர்களைக் கவர்ந்த வில்லன் கதாபாத்திரம்
‘அயன்’ திரைப்படத்தில் தனது வித்தியாசமான தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பால் ஆகாஷ்தீப் சைகல் ரசிகர்களிடம் தனி அடையாளத்தைப் பெற்றார்.இதனைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு வெளியான ‘கவண்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஆகாஷ்தீப் சைகலின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்ட அவர், தற்போது தலைமுடியைக் குறுகியதாக வெட்டி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

அவரது புதிய புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், ‘அயன்’ படத்தில் பார்த்த கமலேஷா இவர் என ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் நினைவில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள கமலேஷ் கதாபாத்திரத்தில் நடித்த ஆகாஷ்தீப் சைகலின் தற்போதைய தோற்றம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளதுடன் குறித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |