படத்திற்காக உயிரைப் பணயம் வைத்த ராஷ்மிகா! - அவரே பகிர்ந்த அனுபவம்
"I Thought It Was My Last Moment" -Rashmika's Terrifying 90-Foot Waterfall Jump: நடிகை ராஷ்மிகா மந்தனா, தான் நடித்து வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக 90 அடி உயர நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடிப் பெண்ணாக ராஷ்மிகா
இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகும் ‘மைசா’ திரைப்படத்தில் ராஷ்மிகா பழங்குடியினப் பெண்ணாக நடித்துள்ளார்.

வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து, துணிச்சலான போராளியாக மாறும் பெண்ணின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
90 அடி உயரத்தில் உயிர் பயம்
இப்படத்திற்காக 90 அடி உயர நீர்வீழ்ச்சியிலிருந்து குதிக்கும் காட்சியில் ராஷ்மிகா நடித்துள்ளார். தனக்கு உயரம் என்றாலே அதிக பயம் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும் அந்த உயரத்தில் நின்றபோது மிகுந்த பதற்றம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தத் தருணத்தில், 'இதுதான் எனது கடைசி நிமிடமாக இருக்குமோ' என்று நினைத்ததாகவும், குதித்த பிறகு பாதுகாப்பாகக் கீழே வந்தபோதும் உடல் நடுங்கி கண்ணீர் விட்டதாகவும் கூறியுள்ளார்.
படப்பிடிப்பில் காயம் - வெளியீடும் தள்ளிவைப்பு
மேலும், இப்படத்தின் நீருக்கடியிலான சண்டைக் காட்சிகளிலும் ராஷ்மிகா கடுமையாக உழைத்துள்ளார். படப்பிடிப்பின்போது அவருக்குக் காயமும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் நவம்பர் 27ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘மைசா’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |