பழைய போனை விற்கப்போகிறீர்களா? அப்போ இந்த தவறை செய்யாதீங்க
பழைய போனை விற்பனை செய்யும் போது செய்யக்கூடாத தவறுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தற்போதுள்ள காலங்களில் அடுத்தடுத்து பல மாடல்களில் புதிய போன்கள் வரும் நிலையில், பயனர்களும் தாங்கள் வைத்திருக்கும் பழைய மாடல்களை கொடுத்துவிட்டு புதிய மாடல்களை வாங்குவதற்கு அதிகமாக விரும்புகின்றனர்.
ஆனால் பழைய போனின் மதிப்பை அறியாமல் சிலர் விற்பனை செய்துவிடும் நிலையில், சில விடயங்களை அறிந்து கொள்வது முக்கியமாகும்.
பழைய போனை விற்பனை செய்யும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விடயங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
பழைய மொபைல் போனை விற்பனை செய்யும் முன்பு அதிலிருக்கும் புகைப்படங்கள், தொடர்புகள், வங்கித் தகவல்கள் இவற்றினை அழிக்காமல் கொடுப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை பாரிய சிக்கலை ஏற்படுத்தும்.
நீங்கள் வைத்திருக்கும் பழைய போனை யாரும் வாங்க மாட்டார்கள் என்று நினைத்து குறைவான விலையை நிர்ணயம் செய்வது கூடாது. ஆதலால் மார்க்கெட் நிலவரம் அறிந்து உங்களது போனின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கேற்ப விலையை தீர்மானிக்கவில்லையெனில் பணமிழப்பு நேரிடும்.
மேலும் போனில் சில கீறல்கள், போனின் மோசமான நிலை இருந்தால் அதனை நிச்சயம் வாங்குபவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இத்தருணத்தில் நீங்கள் உண்மையை மறைக்காமல் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியம்.
பாதுகாப்பாற்ற முறையில் பணத்தை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆதலால் பாதுகாப்பான கட்டண செயலிகளை பயன்படுத்தி பணத்தை கொடுக்க வேண்டும்.
தெரிந்தவர்களிடம் போனை விற்காமல் அந்நிய நபரிடம் விற்பனை செய்கிறீர்கள் என்றால், அவர்களின் அடையாளம், தொடர்பு கொள்ள தேவைப்படும் தகவல்களை கட்டாயம் வாங்க வேண்டும். முடிந்தவரை அவர்களிடமிருந்து அடையாளச் சான்றாக ஆதார் அட்டை ஓட்டுநர் உரிமத்தை வாங்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |