சமையலறையில் இருக்கும் இந்த 6 விஷயங்கள் புற்றுநோயை உண்டாக்கும் ஜாக்கிரதை
தற்போது சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துவரும் பிரச்சினைங்களுள் புற்றுநோய் மிக முக்கிய இடம் வகிக்கிறது.
உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் என்கிற கேன்சர்.
சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது.
இந்த உயிர்கொல்லி நோய் ஏற்படுவதற்கு நம் சமையல் அறையில் இருக்கக்கூடிய சில பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கின்றது என கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம் நம்மை அறியாமலே நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றது.அவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Non stick cookware
தற்காலத்தில் அதிகமாகவர்கள் சமைப்பதற்கு பயன்படுத்தும் Non stick பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்துவதில் பிரதான அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்ஸ்டிக் கோட்டிங்கை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் பெர்ஃபுளோரோஆக்டநோயிக் அமிலமானது (PFOA) புற்று நோயுடன் தொடர்புடையது என சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை பாத்திரங்கள் அதிகப்படியாக வெப்பத்தை வெளிப்படுத்துகின்றது. இதில் இருந்து உருவாகும் புகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தூண்டுகின்றது.
அலுமினியம் ஃபாயில்
தற்போது பல்வேறு விதமான சமையல்களில் அலுமினியம் ஃபாயிலின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. அதனால் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவுகள் (கேன்டு ஃபுட்)
கேன்களில் அடைத்து வரக்கூடிய உணவுகள் நமத வேலையை இலகுபடுத்துகின்றமையினால் நாம் அதனை வாங்கி பயன்படுத்துகின்றோம்.
ஆனால் இந்த கேன்களின் ஓரங்களில் அமைந்திருக்கக் கூடிய BPA உணவுகளில் கலப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.
குறிப்பாக கேன்களை நாம் சூடேற்றினாலோ அல்லது அவை அமிலம் நிறைந்த உணவுப் பொருட்களோடு தொடர்பு கொண்டாலோ BPA நிச்சயமாக உணவுடன் சேர்க்கின்றது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
இறைச்சிகளை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் நமது உடலில் நைட்ரோசமைன்களாக மாற்றமடைகின்றன.
அதனால் புற்றுநோய் செல்கள் தூண்டப்படுவதாகவும் இதனை தொடர்ந்து சாப்பிடும் பட்சத்தில் இது புற்நோயை ஏற்படுத்தும் எனவும் தெரியவருகின்றது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை புற்றுநோய் செல்களின் வளர்க்கியை தூண்டுகின்றது. அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் அபாயம் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான பொருட்களின் பாவனையை முடிந்தவரை குறைத்துக்கொள்வதால் உயிர் கொல்லி நோயான புற்றுநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
பிளாஸ்டிக் பொருட்கள்
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்டைனர்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பிஸ்பினால்A (BPA) என்ற கெமிக்கல் ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்துவதுடன் புற்றுநோய் அபாயத்தையும் அதிகதிக்கின்றது.
சமையலறை பொருட்களை சேமித்து வைக்க பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |