வயதான தோற்றத்தைக் கொடுக்கும் உணவுகள் இனிமேல் சாப்பிடாதீங்க
பொதுவாகவே ஆணோ பெண்ணோ தன் அழகை அப்படியே தக்க வைத்தக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.
முதுமையிலும் இப்போது இருக்கும் அதே அழகை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் உணவுகள், சருமத்தை அழகுப்படுத்தும் அழகுசாதன பொருட்கள், உடற்பயிற்சி, தியானம் என எல்லாவற்றையும் கடைப்பிடிப்பார்கள்.
ஆனால் முதுமைத் தோற்றம் வராமல் இருப்பதற்கு நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்த்து வந்தால் முதுமையை விரட்டி இளமையாக இருக்கலாம். அப்படியான உணவுகள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
முதுமையைக் கொடுக்கும் உணவுகள்
உடலுக்கு அதிகபடியான சக்கரையை எடுத்துக் கொண்டால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை உருவாக்கி திசுக்களை சேதப்படுத்தும்.
அதிக சக்கரை கொண்ட பானங்களை குடிப்பதால் எடை அதிகரிப்பு மற்றும் கிளைகேஷனுக்கு வழிவகுக்கும் இதனால் விரைவில் முதுமை ஏற்படும்.
அதிக கொழுப்பு நிறைந்த சீஸை அதிகம் சாப்பிட்டால் தோல் வீக்கம், இருதய பிரச்சினை என்பவை ஏற்படும்.
பேக் செய்யப்பட்ட பிஸ்கட், கேக், பாண், பப்ஸ் போன்ற உணவுகளில் சுத்திகரிக்கப்பட்ட மா சேர்க்கப்படுகிறது. இவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம் எடை அதிகரிக்கும் மேலும், தோல் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
சாஸ்களில் சேர்க்கப்படும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சக்கரைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரித்து வயதான தோற்றத்தை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |