சிறுநீரக நோயாளிகள் கட்டாயமாக சாப்பிட கூடாத உணவுகள்
சிறுநீரகத்தில் பிரச்சனைகள் இருப்பவர்கள் அதை குறைப்பதற்காக சில உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொள்வது சிறந்ததாக கருதப்படுகின்றது.
சிறுநீரகம்
உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து கழிவுகளை வடிகட்டி, அதிகப்படியான திரவங்களை சிறுநீராக வெளியேற்றுவதில் பணியாற்றும் சிறுநீரகங்கள் நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.
இது உடலில் சரியாக வேலை செய்யவில்லை என்றால் உயிருக்கே அபத்து வரத்தொடங்கும். இந்த உறுப்பில் பாத்திப்பு ஏற்பட்டால் அது உடலில் நச்சுக்கள் மற்றும் திரவங்கள் குவிய தொடங்குகிறது.
நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக சிறுநீரகத்தின் செயல்பாடு மோசம் அடையும் ஒரு நிலையாகும். இந்த நோயாளிகள் அதிகமான சோடியம் நிறைந்த உணவுகளை உண்ண கூடாது.
இதனால் சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. உப்பு உட்கொள்வதை குறைத்துக் கொள்வதன் மூலமாக உங்கள் உடலின் திரவ தக்க வைப்பு செயல்முறைக்கு நீங்கள் உதவலாம்.
மேலும் இது நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் கொண்ட நோயாளிகளில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இதை தவிர அதிகமான பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்ண கூடாது.
வாழைப்பழங்கள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் உருளைக்கிழங்குகளில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இதனை சிறுநீரக நோயாளிகள் மிதமான அளவு சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
பாஸ்பரஸ் உணவுகள் உட்கொள்வது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். எலும்புகள் வலுவிழந்து காணப்படுவதோடு சருமத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. பால் சார்ந்த பொருட்கள், நட்ஸ் வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பாஸ்பரஸ் அளவுகள் அதிகமாக இருப்பதால் சிறுநீரக நோயாளிகள் இவற்றை தவிர்ப்பது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |