இரவில் பால் குடித்தால் ஆபத்தா? இந்த உணவுகள் எல்லாம் சாப்பிடாதீங்க... தூக்கமே பறிபோகும்
பொதுவாக இப்போது அனைவரும் போதுமான தூக்கம் பெறுவதில் பல சிரமங்கள் இருக்கிறது. போதுமான தூக்கம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிக அவசியமாகிறது.
தூக்கமின்மை பிரச்சினைகளால் உங்கள் உடல் மற்றும் மன நலன் பாதிக்கப்படுவதோடு இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. அந்தவகையில், உங்கள் தூக்கத்தை பாதிக்கும் விடயங்களில் உணவுத் தேர்விற்கு ஒரு பங்கு இருக்கிறது.
அவ்வாறு உங்கள் தூக்கத்தை பாதிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
இரவில் சாப்பிடக் கூடாதவை
இரவில் பால் குடித்தால் செரிமான செயல்முறையை மெதுவாக்கும் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும். இந்த செயல்முறை உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை பாதிக்கிறது மற்றும் கொழுப்பு படிவு மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கும் பெண்களுக்கு பால் பொருட்களை குறைக்க வேண்டும்.
இரவில் பால் குடிப்பது இன்சுலின் வளர்ச்சி காரணிகளைத் தூண்டுவதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
இறைச்சி உணவுகளை தாமதமாக சாப்பிடும் போது செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டு தூக்க கலக்கமும் ஏற்படும்.
இரவில் சாக்லேட்களை சாப்பிடும் போது அதில் இருக்கும் காபின் தூக்கத்தைக் கெடுக்கும்.
இரவில் சாதம் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். இவ்வாறு இரவில் சாதம் சாப்பிடுபவராக இருந்தால் 2 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
இரவில் பீனட் பட்டரை சாப்பிட்டால் இரவில் தூக்கம் கெட்டுவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |