இரவு சிக்கன் சாப்பிடுபவரா நீங்கள்? இனிமேல் அந்த தவறை மட்டும் செய்யாதீங்க
இரவு நேரத்தில் நாம் எந்தமாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவு மிகவும் அவசியமாகும். அதற்கான நாம் தெரிவு செய்யும் உணவுகள் சத்தானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதே போன்று இரவு நேரத்தில் உணவுகளை தெரிவு செய்யும் போது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சில உணவுகள் தூக்கம், செரிமானம் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும்படியாக இருந்தால், அதனை தவிர்க்க வேண்டும்.
இவற்றினை பகலில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இரவில் தீங்கு விளைவிக்கும் என்பதால் தவிர்க்கவும். அது எந்தெந்த உணவுகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
சத்துக்கள் நிறைந்த தயிரை பகலில் சாப்பிடுவதால், நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், எலும்புகளை பலப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் செய்கின்றது. ஆனால் இவற்றை இரவில் சாப்பிடும் போது எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றது. சளி, இருமல் பிரச்சனையுடன் வாயு பிரச்சனையும் ஏற்படலாம்.
பகலில் தாராளமாக பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு பழங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சளி பிரச்சனை மற்றும் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனை ஏற்படுத்தும். தூக்கத்திற்கும் பிரச்சனையாக இருக்கும்.
அதிக அளவு புரதச்சத்து கொண்ட சிக்கனை நாம் உட்கொள்ளும் போது ஜீரணிக்க அதிகமான நேரத்தையும் எடுத்துக் கொள்ளும். இரவில் சிக்கன் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை, தூக்க பிரச்சனையும் ஏற்படும். சிக்கன் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அளவோடு எடுத்துக் கொள்ளவும்.
photo: JEN CAUSEY
கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் செரிமான அமைப்பு நீண்ட நேரம் வரை செயல்பட்டு அதை செரிக்கச் செய்து தூக்கத்தை கெடுக்கும்.
அதிக கார்போஹைட்ரேட், சர்க்கரை, வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உலர்பழங்களை அதிகாலையில் சாப்பிட்டால் நன்மை அளிக்கும். அதுவே மாலை அல்லது இரவில் சாப்பிட்டால், வயிற்று நொதிகளால் அவற்றை உடைக்க முடியாது. இதனால் கடுமையான செரிமானக் கோளாறு ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |