இரவில் தூக்கத்தை கெடுக்கும் உணவுகளின் பட்டியல் இதோ...
இரவில் தூக்கத்தை கெடுக்கும் உணவுகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இரவில் தூக்கம் இல்லை என்றால் மறுநாள் சிறப்பாக இருப்பது என்பது கடினமாகிவிடும். சுறுசுறுப்பு இல்லாமல் அன்றைய நாள் முழுவதும் மந்தமாகவும், வேலைகள் அனைத்தும் தடைபடவும் செய்யும்.
தூக்கத்தை கெடுக்கும் உணவுகள்
மது அருந்தினால் தூக்கம் வரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மது தூக்கத்தை கெடுக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வயிற்று அமிலத்தில் விளைவுகளையும் ஏற்படுத்தும்.
அதிகமாக சாப்பிட்டாலும் தூக்கம் தடைபடும் இதே போன்று பொரித்த உணவுகள், சீஸ் போன்றவையும் தூக்கத்தை கெடுக்கும். அஜீரண பிரச்சினையையும் ஏற்படுத்தும்.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட தர்பூசணியை இரவில் எடுத்துக் கொண்டால் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க எழும்பும் போது தூக்கம் தடைபடும்.
இரவில் சாக்லெட், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவையும் இரவில் தூக்கமின்மை பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.
அதே போன்று நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் கார உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. இவை தூக்கத்தை பெரிதும் பாதிக்கின்து.
இரவில் தூக்கச் செல்லும் போது டீ, காபி இவற்றினை எடுத்துக் கொள்ளக்கூடாது. தூக்கமின்மை பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. தேவையெனில் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு குடிக்கலாம்.