குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு அரிப்பை தடுக்கவேண்டுமா?
குளிர்காலத்தில் பொடுகு மற்றும் முடி உதிர்வு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய முறையில் தீர்வு காணலாம்.
வேப்ப எண்ணெய்
மையில்டு ஷாம்பூவை வேப்ப எண்ணெயுடன் கலந்து வாரத்திற்கு இரு முறை தலையில் தடவி அலசி வர பொடுகு தொல்லை இருக்காது. தலையில் ஏற்படும் அரிப்பில் இருந்தும் சிறந்த தீர்வளிக்கும்.
தேயிலை மர எசென்ஷியல்
வழக்கமான ஷாம்பூவில் தேயிலை மர எசென்ஷியல் எண்ணெய் அல்லது மிளகுக்கீரை எசென்ஷியல் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கி தலையில் தடவி வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்துவது பொடுகு தொல்லைக்கு தீர்வளிக்கும்.
மருந்து கடைகளில் கிடைக்கும் சாதாரண ஆஸ்பிரின் மாத்திரை இரண்டினை பொடித்து நைசாக்கி சிறிது தண்ணீரில் கலந்து ஈரமான தலையில் நன்கு தடவி விடுங்கள். 2-3 நிமிடங்கள் ஊற வைத்து தலையை நன்கு நீரில் சுத்தம் செய்து விடலாம்.
சமையல் சோடா இரு டீஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீரில் கலந்து ஈர தலையில் மண்டையில் படும்படி தடவி 10 நிமிடங்கள் பொறுத்து குளிர்ந்த நீரில் தலையினை நன்கு அலசி விடவும்.
ஆப்பிள் சிடார் வினிகர் என்று கடையில் கிடைக்கும். இதனை சிறிதளவு நன்கு தலையில் தடவுங்கள். இதன் மருத்துவ குணம் கிருமி நாசினியாக செயல்படும். 15 நிமிடங்கள் தலையில் டவல் சுற்றி வைத்து பின்பு நன்கு தலையினை அலசி விடுங்கள்.
வாரம் இருமுறை கூட இதனைச் செய்யலாம். பொடி உப்பினை சிறிது நீரில் கலந்து ஈரமான தலையில் தடவி ஐந்து நிமிடங்களில் அலசுங்கள். வெள்ளை வெள்ளையாக கொட்டுவது நீங்கும்.
பூண்ட நசுக்கி சாறு எடுத்து தலையில் தடவி பின்னர் ஷாம்பு போட்டு அலசி விடுங்கள். ஆலிவ் எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து தலையை அலச முடியின் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.