வேண்டாம் என்று ஒதுக்கும் பழத்தில் இத்தனை நன்மைகள் ஒளிந்து இருக்கா?
நமது உடலை எப்போதும் புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வதை்திருக்கும் அவகாடோ பழத்தின் நன்மைகளை இந்த பதவில் தெரிந்து கொள்ளலாம்.
அவகாடோ
இந்த பழத்தில் 73 சதவிகிதம் தண்ணீர் தான் நிரம்பியுள்ளது. கோடை காலத்தில் இயல்பாகவே உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால் இந்த பழத்தை தினமும் உண்ணலாம்.
இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் உடலின் எகட்ரோலைட் சமநிலையை பராமரிக்க இது பெரிதும் உதவுகிறது. அதிகமான வெப்பநிலையில் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்க பொட்டாசியம் அவசியமாகும். பொதுவாக வாழைப்பழத்தில் தான் அதிக பொட்டாசியம் இருக்கும் எனக் கூறப்படுவதுண்டு.
வாழைப்பழத்தில் இருப்பதை விட அவகோடாவில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. இந்த பழத்தில் இருக்கும் நிறைவுறா கொழுப்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
அவகாடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, கார்போஹைடரேட்ஸ் ஆகியவை சமநிலையில் உள்ளதால் நம் உடலுக்கு நீடித்த ஆற்றலைத் தருகிறது.
இதிலிருக்கும் ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் தீங்கு நிறைந்த புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |