நீரிழிவு நோயாளிகளின் குழி புண்களை இயற்கையாக குணப்படுத்தலாமா? எச்சரிக்கை...
பொதுவாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் அது எளிதில் குணமாகாது. சர்க்கரை நோய் பாதிப்பின் காரணமாக கால்கள் மரத்துப்போகும்.
மேலும் நரம்புகள் பாதிப்படைவதால், அவற்றின் செயல்திறன் குறைந்து கால்களின் உணர்வு படிப்படியாகக் குறைந்துவிடும். ஆரம்பக்கட்டத்தில் சர்க்கரை நோயாளிகளால் இதை உணர முடியாது.
ஆனால், காலப்போக்கில் கால்கள் விரைத்தது போன்ற உணர்வு தோன்றும். இன்னும் சொல்லப்போனால் ஏதோ மெத்தையில் நடப்பதுபோல் இருக்கும்.
கால்களில் மாட்டிய செருப்பு கழன்றாலும்கூட அது நமக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் கல், முள் அல்லது ஆணி குத்தினால்கூட அதை உணர முடியாது. காரணம் கால்கள் மரத்துப்போயிருக்கும்போது காயம் ஏற்பட்டால் வலி தெரியாது.
அது உணரப்படாத பட்சத்தில் காயம்பட்ட இடத்தில் மேலும் அழுத்தி அழுத்தி நடப்பதால் புண் மேலும்மேலும் அதிகரித்துக்கொண்டே போகும்.
அதேபோல், சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் காலிலுள்ள திசுக்களுக்கு போதிய ரத்தம் பாய்ச்சப்படாமல் போகும்.
அப்போது காயமோ, புண்ணோ ஏற்பட்டால் போதிய ரத்தம் கிடைக்காமலும் புண்கள் ஆறுவதற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமலும் போய்விடும். இது தவிர புண்களில் கிருமித் தொற்று ஏற்படவும், பெருகவும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே ரத்த சர்க்கரையின் அளவு எப்போதும் சரியான அளவில் பார்த்துக்கொள்வதோடு புண்கள் ஏற்படாமல் கவனமாக இருப்பதும் அவசியமானதாகும். அப்படி இருந்தால் இயற்கை மருத்துவத்தை விட முதலில் மருத்துவர்களை நாடுவது சிறந்தது.
நீரிழிவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது ஆவாரம் பூ
நீரிழிவால் உண்டாகக் கூடிய தாகம், உடல் சோர்வு, தொண்டை வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழிதல் போன்ற உபாதைகளை கட்டுப்படுத்துகிறது ஆவாரை பூ, இலை, வேர், பட்டை, பிசின் அனைத்தையும் ஒன்றாக்கி அதனுடன் நாவல் பட்டை, கொன்றைபட்டை, மருதம், கோஷ்டம் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரை நீர் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு நீரிழிவால் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துகிறது.
சுருக்கமாக சொல்வதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது ஆவாரை குடிநீர் என்று சொல்லலாம்.