சிவனுக்கு நைவேத்தியம் செய்ய இந்த வடை சூப்பராக இருக்கும்! இந்த ஐந்து படிமுறைகள் தெரிந்தால் போதும்
பொதுவாக இன்றைய தினம் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு வீடுகளில் சுவையான இனிப்பு பண்டங்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுவிட் வகைள் எல்லாம் சிவனின் அனுஷ்டிப்புக்கு செய்வார்கள்.
இதன்படி, வீட்டிற்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை அனைவரையும் கவரும் அவல் வடை எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்ளவோம்.
தேவையான பொருட்கள்
மெல்லிய அவல் - 2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
ரவை (வெள்ளை) - 3டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தயாரிப்பு முறை
1. முதலில் வடைக்கு தேவையான வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி என்பவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. பின்னர் வடைக்கு தேவையான அவலை அவலை நன்றாகக் கழுவி, நீரிலிருந்து தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
3. நீரிலிருந்து தனியாக வடிகட்டி எடுத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் உள்ளிட்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
4. கலவை கலந்து முடியும் கட்டத்தில் இருக்கும் போது அதில் ரவை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும், அதில் வடை தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.