கசக்கி குப்பையில் வீசிய லாட்டரிக்கு ரூ.1 கோடி.. கேரளா ஆட்டோ டிரைவருக்கு அடிச்ச அதிர்ஷடத்தை பாருங்க
வாங்கிய லாட்டரியினை குப்பையில் வீசிய ஆட்டோ சாரதிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாட்டரி சீட்டு வாங்கிய ஆட்டோ டிரைவர்
கேரளாவில் லாட்டரி சீட்டு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசே லாட்டரி விற்பனை செய்துவரும் நிலையில், வாரத்தில் 7 நாளும் குலுக்கல் நடைபெற்று 1 கோடி வரை பரிசுத் தொகை வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் பண்டிகை நாட்களிலும் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக விற்பனை ஆகும். சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு 25 கோடி பரிசு விழுந்துள்ளது.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனர் சுனில் குமார்(53) என்பவர் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். புதன்கிழமை வெளியாகும் 50:50 லாட்டரியை ரூ.50 கொடுத்து வாங்கியிருக்கிறார். இந்த லாட்டரிக்கு முதல் பரிசு ரூ.1 கோடியாகும்.
ஆனால் சுனில் வாங்கிய லாட்டரி சீட்டை வீட்டில் குப்பை தொட்டியில் போட்டுள்ளார். இந்நிலையில் திடீரென சுனில் குமாருக்கு, ஒருவேளை நமக்கு் லாட்டரி சீட்டு விழுந்திருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
லாட்டரியில் குலுக்கல் முடிந்து முதல் பரிசுக்கான லாட்டரி எண் ak 633063 அறிவிக்கப்பட்ட நிலையில், வீட்டிற்கு சென்று தனது லாட்டரி டிக்கெட்டை தேடியுள்ளார்.
இறுதியில் இவர் வைத்திருந்த லாட்டரியில் ak 633063 என்ற எண் இருந்துள்ளது. கடனில் இருக்கும் தனது வீட்டை மீட்டு பின்பு அவ்வீட்டை குறித்த பணத்தின் மூலம் எடுத்து கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். குப்பையில் தூக்கி வீசிய லாட்டரியால் ஒரு கோடி பரிசு விழுந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |