சக விளையாட்டு வீரருக்கு காதலர்கள் தின வாழ்த்து கூறிய வீரர்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சக வீரருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை போட்டு காதலர்கள் தின வாழ்த்து பகிர்ந்த ஆஸ்திரேலிய வீரரின் பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காதலர்கள் தினக் கொண்டாட்டங்கள்
இன்றைய தினம் உலக காதலர்கள் தினத்தை உலகத்திலுள்ள பிரபலங்கள் உட்பட பலரும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
அவர்களின் காதலர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் காதலர்கள் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் எனும் பெயர் கொண்ட இரண்டு விளையாட்டு வீரர்கள் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்கள்.
ஓரின திருமணத்திற்கு எத்தனிக்கும் இரண்டு விளையாட்டு வீரர்கள்
இதனை தொடர்ந்து இன்றைய தினம் காதலர்கள் தினத்தையோட்டி ஜாம்பா, ஸ்டோய்னிஸின் கன்னங்களில் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிக் பாஷ் லீக்கின் ட்விட்டர் பக்கம், "காதலர் தின வாழ்த்துகள்" என்று ஒரு அன்பான ஈமோஜியுடன் பகிர்நதிருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், தற்போது இரண்டு ஆண்கள் திருமணம், இரண்டு பெண்களின் திருமணம் என ஓரின திருமணங்கள் நடைப்பெற்று வருவதால் இவர்களையும் இது போல் நினைத்து இணையவாசிகள் வைரலாக்கி வருகிறார்கள்.
இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ விளையாட்டு வீரர்களும் இப்படியா?” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
happy valentine's day ? pic.twitter.com/tv5dkKlxi3
— KFC Big Bash League (@BBL) February 13, 2023