கல்யாணம் பண்ணலாமா...! நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய வெளிநாட்டு அரசியல்வாதி!
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தனது காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினரை, திருமணம் செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவம் ஒன்று அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது.
தற்போது இது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருமணத்திற்கு அழைப்பு
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாதன் லாம்பர்ட், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான நாடாளுமன்ற உறுப்பினர் நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும் பின்னிரவில் அதைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அவையிலிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி நாடாளுமன்ற உறுப்பினரின் காதலை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் லாம்பர்டினுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது காதலை ஏற்றுக் கொண்ட நோவா எர்லிச் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.