ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் திடீர் மரணம் - அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே(52) மாரடைப்பால் இறந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷேன் வார்னே, 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஷேன் வார்னே தாய்லாந்தில் அவரது பங்களாவில் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.