ஆஸ்திரியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர்களுக்கு இனி அனுமதி!
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி கிடக்கும் நேரத்தில், பல நாட்டிலும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால், பல கட்டுப்பாடுகளை பல நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஆஸ்திரியாவில், முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டினர் தகுதியான விசா வைத்திருந்தால் டிசம்பர் 1-ம் திகதி முதல் ஆஸ்திரியா வரலாம் என அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், ஆஸ்திரியாவுக்குள் தடையின்றி வரலாம். விலக்கு கோரி தனியாக விண்ணிப்பிக்கத் தேவையில்லை.
மேலும், மாணவர்கள், தொழிலாளர்கள், மனிதநேய ஆர்வலர்கள், விடுமுறைக்கு வரும் பயணிகள், குடும்பத்துடன் வருவோர் அனைவரும் தகுதியான விசா வைத்திருத்தல் போதுமானது.
ஆஸ்திரியாவின் மருந்து நிர்வாக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும்.
விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது தடுப்பூசி சான்றிதழ், பயணத்துக்கு 3 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வெளியிட்டு வருகின்றனர்.