வெற்றி கொண்டாட்ட மிதப்பில் ஷூவை கழட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த செயல்! இணையத்தில் சர்ச்சையாகும் காட்சி!
ஐசிசி டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா முதல்முறையாக வென்று சரித்திரம் படைத்துள்ளது. ஐசிசி டி20 உலககோப்பை போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நடைப்பெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பில்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து, 173 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நியூசிலாந்தின் அணியின் கேப்டன் வில்லியம்சன் நிலைத்து நின்று ஆடி அணிக்காக 85 ரன்களில் 48 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர் விளாசியிருந்தார். இதனைத்தொடர்ந்து, 173 ரன்களை இலக்குக்கு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷின் அதிரடி பேட்டிங்கால் எளிதான வெற்றியை ருசித்தது.
என்னதான், நியூசிலாந்து அணி பலம் வாய்ந்த அணிகளாக இருந்தாலும் இறுதிபோட்டியில் சொதப்பி விடுகின்றனர். கேப்டன் வில்லியம்சனுக்கு ஒரு பக்கம் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
இந்நிலையில், வெற்றிக்கொண்டாட்ட மிதப்பில் மிதந்த ஆஸ்திரேலிய வீரர்கள் செய்த செயல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், வீரர்கள் நடனமாடியும், காலில் போட்டிருந்த ஷூவை கழட்டி மேத்யூ வேட் பீரை ஊற்றி குடிக்கும் காட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மேலும், இந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதால், பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.