மனித முகத்துடன் ஆந்தை! அதிர்ஷ்டத்தை கொண்டு வருமாம்- அரியவகை உயிரினத்தால் பரபரப்பு
வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்பப்படும் மனித முகத்துடன் காணப்பட்ட ஆந்தையின் படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் புதுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் தன்னுடைய தோட்டத்திற்கு சென்றுள்ளார், அப்போது வித்தியாசமான தோற்றம் கொண்ட ஆந்தை ஒன்று தரையில் கிடந்துள்ளது.
பறக்க முடியாமல் கஷ்டப்பட்ட ஆந்தையை மீட்ட செல்வராஜ், அதன் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதுபற்றி தகவல் தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் ஆந்தையை பார்க்க குவிந்தனர், விரைந்து வந்த வனத்துறையினர் ஆந்தையை மீட்டனர்.
மனித முகத்துடன் ஆந்தை
அவுஸ்திரேலியாவில் அதிகம் வசிக்கும் இந்த வகை ஆந்தைகள் பார்ன் இனத்தை சேர்ந்தது.
பார்ப்பதற்கு மனித முகத்துடன் வித்தியாசமாக இருக்கும் ஆந்தையின் வாய் அலகு மற்றும் கால்களை கட்டி வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இதற்காக ஆந்தைகளை வேட்டையாவது அதிகரித்துள்ளதால் இந்தியாவில் 10,000 ரூபாய் வரை விற்பனையாகுமாம்.