ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து டி20 பைனல் - வெற்றி யாருக்கு? ஆடும் 11 இதுதான்!
டி20 உலககோப்பை போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது.
இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதாலும், முதல் முறையாக டி20 உலக கோப்பையை தூக்கும், ஆர்வத்தில் இருப்பதால் போட்டி கண்டிப்பாக மிகக்கடுமையாக இருக்கும்.
துபாயை பொறுத்தமட்டில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த உலக கோப்பை தொடரில் துபாயில் நடந்த அனைத்து போட்டிகளிலும் 2-வதாக பேட்டிங் ஆடிய அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதால் டாஸ் மிக முக்கியம்.
மேலும், இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இதுவரை 14 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வெற்றியின் சதவீதம் 64.28 ஆகவும், நியூசிலாந்து அணியின் வெற்றியின் சதவீதம் 35.71 ஆகவும் உள்ளது. இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதற்கு முன் ஒரு முறை மோதியுள்ளன.
அதில் நியூசிலாந்து அணியே கடைசி ஓவரில் வெற்றியை ருசித்துள்ளது. 2016-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் நியுசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே ஆடாததால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக டிம் சேஃபெர்ட் ஆடுவார். அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. இந்த ஒரு கட்டாய மாற்றத்தைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே.
டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.