Gold Rate Today: அதிரடியாக குறைந்த தங்க விலை! சவரன் எவ்வளவு?
ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 24) 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.15,030 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிவலரம்
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) தங்கம் விலையில் சிறிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.15,010 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ச்சியாக விலை உயர்வை எதிர்பார்த்து வந்த நகை வாங்குவோருக்கு இந்த சிறிய விலை குறைவு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.12,780 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,02,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.265 ஆக உள்ளது.அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |