நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்: தங்கம் விலை தடாலடி சரிவு ...இன்று சவரன் எவ்வளவு?
gold and silver price : தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தாண்டுமா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்த நிலையில், தற்போது ரூ.2 லட்சத்தை எட்டிவிடுமோ என்ற அச்சமும் நகைப்பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் தாக்கத்தால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று அதிரடியாக சரிந்த தங்கம் விலை
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,820-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.94,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று சரிவு காணப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து, ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |