வயசானாலும் உன் Style-ம் அழகும் உன்ன விட்டு போகல! ரஜினியின் மைக்கை பிடுங்கி அதிரவைத்த ரம்யாகிருஷ்ணன்
ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கும் போதே மைக்கை வாங்கி ரம்யா கிருஷ்ணன் பேசிய வார்த்தைகள் அரங்கத்தை அதிர வைத்துள்ளது.
ஜெயிலர் திரைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடந்த 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத பல விஷயங்களை பேசியதை பார்க்க முடிந்தது.
குறிப்பாக ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து பேசியபோது, என்றுமே சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தொல்லை தான். ஹுக்கும் பாடலில் இடம் பெற்ற சூப்பர் ஸ்டார் என்கிற வார்த்தையை கூட நீக்க சொன்னதாக தெரிவித்தார்.
அப்போது கீழே அமர்ந்து, ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு ஓடிவந்து, அவரிடமிருந்து மைக்கை வாங்கி யாரும் எதிர்பாராத விதமாக பேசி அதிர்ச்சி கொடுத்தார்.
ஆம் 'படையப்பா' படத்தில் நீலாம்பரி ரஜினிகாந்தை பார்த்து பேசும், "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும்... கூடவே பொறந்தது எங்கேயும் போகாது"! என பேச அரங்கமே அதிர்ந்துள்ளது.
Seekiram paarunga..
— Jeevan Santhosh (@ijeevan) July 29, 2023
Ramya Krishnan mass moment with #Thalaivar #SuperstarRajinikanth
Crowd roars???#JailerAudioLaunch #Jailer #JailerFromAug10th pic.twitter.com/m7MgtrgJXh
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |