அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு!
தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள நடிகர்களுள் ஒருவர் தான் அட்டகத்தி தினேஷ்.
இவர்தனது காதல் குறித்து இதுவரை நேரடியாக எதையும் வெளிப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவரது காதல் வாழ்க்கை குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் தினேஷ்
‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் விஆர் தினேஷ். தொடர்ந்து ‘குக்கூ’, ‘விசாரணை’, ‘கபாலி’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஒருவாக்கியுள்ளார்.

இதனிடையே, ‘லப்பர் பந்து’ திரைப்படம் தினேஷின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. இப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அவரை ‘கெத்து தினேஷ்’ என்ற பெயரிலும் ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.
தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தினேஷ், தனது அடுத்தடுத்த படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், தனது 26ஆவது படமாக ‘பந்தா கேங்ஸ்’ திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படமும் ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் பாணியை ஒட்டிய கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதல் குறித்து மறைமுகமாக பேசிய தினேஷ்
இதற்கிடையில், நடிகர் தினேஷ் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அந்தக் காதல் திருமணத்தில் முடிவடைய உள்ளதாகவும் சமீபத்திய சில நேர்காணல்களில் சூசகமாக தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்தப் பெண் யார் என்பது குறித்து அவர் வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.இதனால், தினேஷின் காதலி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

காதலியின் வைரல் பதிவு
இந்த நிலையில், தொகுப்பாளினி விஜே எழிலரசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு, அந்த எதிர்பார்ப்புக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. காதலை வெளிப்படுத்திய விஜே எழிலரசி விஜே எழிலரசி, நடிகர் அட்டகத்தி தினேஷுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அவரை காதலித்து வருவதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கட்டும்...” என அன்புடன் குறிப்பிட்டுள்ளார். தினேஷுடன் இருக்கும் புகைப்படங்களுடன் எழிலரசி வெளியிட்டுள்ள இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதன் மூலம், தினேஷ் இதுவரை நேரடியாக வெளிப்படுத்தாமல் இருந்த தனது காதல் குறித்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு வெளிப்படையாக தெரியவந்துள்ளது. நடிகர் தினேஷின் காதல் குறித்த இந்தப் புதிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இருவருக்கும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |