அண்ணன் என கூறிய ப்ரியாவை அட்லீ திருமணம் செய்தது எப்படி? பலரும் அறியாத காதல் கதை
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ பிரதர் என்று கூறிய பிரியாவை எவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் அட்லீ பிரியா தம்பதியினர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ப்ரியா. இவர் இயக்குனர் அட்லீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள் பின்பு காதலர்களாகி திருமணம் செய்து கொண்டனர்.
முகப்புத்தகம் என்கிற குறும்படத்தில் ப்ரியாவை நடிக்க வைத்த போது தான் அட்லீக்கும், அவருக்கும் இடையேயான நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அட்லீயை பிரதர் என்று தான் ப்ரியா அழைப்பாராம்.
பின்பு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ முதன்முதலாக ராஜா ராணி படத்தினை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார்.
ராஜா ராணி வெற்றிக்கு பின்னர் ஒருநாள் ப்ரியாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார் அட்லீ. அப்போது தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக பிரியா கூறியதும், உடனே என்னுடைய ஜாதகத்தை தரவா என்று அட்லீ கேட்டுள்ளார்.
அப்பொழுது அட்லீக்கு தன்மேல் கிரஷ் இருப்பதை பிரியா உணர்ந்ததாகவும் பின்பு காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அண்மையில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெற்றிகண்டுள்ள அட்லீ, ப்ரியாவை ஒரு லக்கி சார்ம் ஆகவே பார்த்து வருகிறார். இந்த ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் மீர் என்கிற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |