என் ஜாதகத்தை தரட்டுமா? பிரியாவிடம் கேட்ட அட்லி- சுவாரசிய காதல் கதை
இந்திய திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார் அட்லி.
ராஜா ராணி தொடங்கி பாலிவுட்டின் ஜவான் வரை வசூலில் சாதனை படைக்கும் படங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
எந்த மேடையானாலும் தன்னுடைய மனைவி பிரியாவை பற்றி மிக நெகிழ்ச்சியுடன் பேசுவார் அட்லி.
இந்த பதிவில் அவர்களுக்கு திருமணம் நடந்த கதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒருமுறை தனது நண்பர்களை சந்தித்த போது பிரியா அட்லியிடம், தனக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறியிருக்கிறார்.
அட்லியோ, ஏன் என் ஜாதகத்தை காட்டக்கூடாது என சொல்ல அங்கிருந்தவர்கள் சிரித்துள்ளனர்.
பிரியாவோ, கொமெடி பண்ணாதீங்க டைரக்டர் என கூறிவிட்டு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்றதும் தனது குடும்பத்தினருடன் கலந்துரையாடியுள்ளார் பிரியா, அவர்களும் சம்மதம் தெரிவிக்க இரு வீட்டாரின் ஒப்புதலுடன் 2014ம் ஆண்டு கரம் பிடித்துள்ளனர்.
அன்றிலிருந்து இன்றுவரை தனது காதல் மனைவியை பற்றி பல மேடைகளில் பெருமையாகவே பேசி வருகிறார் அட்லி.
சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரியா குழந்தையை தூக்கி கொஞ்சியபடியே வாரிசு படத்தை பார்க்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இது வைரலாகி வருகிறது.
.@Atlee_dir’s instagram post ❤️ pic.twitter.com/6AXl5GMf8U
— Kavin Kannan (@HBK_Memes) April 25, 2024