‘ரதிமா’ பாடலை 100 முறைக்கும் மேல் கேட்ட அட்லீ... சாய் அபயங்கருக்கு புகழாரம்!
தமிழ் இசை உலகில் தனது தனித்துவமான இசை மற்றும் பாடல்களால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இளம் இசைக்கலைஞர் சாய் அபயங்கரின் 6-வது Music Video-வான ‘ரதிமா’ தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாடல் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வரும் ‘ரதிமா’, அதன் இசை, காட்சியமைப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இயக்குநர் அட்லீ பாராட்டு
இந்த நிலையில், இயக்குநர் அட்லீ பாடலைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
‘ரதிமா’ பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறியுள்ள அட்லீ, பாடல் வெளியான நாள் முதல் இதுவரை 100 முறைக்கும் மேல் அதைக் கேட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பாடல் தனக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருவதாகவும், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அது தன்னை கவர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாய் அபயங்கரை நினைத்து பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ள அட்லீ, ஒவ்வொரு புதிய படைப்பிலும் சாய் அபயங்கர் தன்னையே மிஞ்சும் வகையில் செயல்பட்டு வருகிறார் எனப் பாராட்டியுள்ளார். அவரது இசைத் திறமையையும், தனது பாடல்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தையும் வெகுவாக ரசிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தான் சாய் அபயங்கரின் தீவிர ரசிகர் என்று தெரிவித்த அட்லீ, அவரது அடுத்த பாடலுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், இசைப் பயணத்தில் தொடர்ந்து பல உயரங்களை அவர் அடைய வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது ரசிகர்களிடைய கவனம் ஈர்த்து வருகின்றது.
@SaiAbhyankkar @Lyricist_Vivek @thinkmusicindia @BhagyashriBose pic.twitter.com/i6Hsz7mOt0
— atlee (@Atlee_dir) August 31, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |