இறுதி நாமினேஷனில் சிக்கிய பிரபலம் வெளியில் வந்தவுடன் என்ன சொன்னார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்து ஏடிகே தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் சிசன் 6 ஆரம்பித்து தற்போது 90 நாட்களை கடந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த சீசனில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஓட்டிங்கின் படி சுமார் 15 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இதில் முதல் ஜிபி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் வெளியேற்றப்பட்டார்கள். மேலும் ஜிபி முத்து வீட்டில் இருக்கும் போது காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அந்தளவு சந்தோசமாக சக போட்டியாளர்களை வைத்துக்கொண்டார்.
இவர் வெளியேறிய பின்னர் பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியேறிய போட்டியாளர்களில் சுமார 10 போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
ஏடிகே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
இதனை தொடர்ந்து இறுதி எவிக்ஷனில் ஏடிகே அவர்கள் கடந்த வாரம் வெளியேறினார். ஆனால் இவர் வெளியேறியவதற்கு முதல் நாள் சக போட்டியாளர்களால் டாஸ்க் எனும் பெயரில் பாதி மொட்டையடிக்கப்பட்டார்.
இதனையடுத்து இவர் ஞாயிற்றுகிழமை வெளியேறப்பட்டார். இதன்போது கமல் அவர்கள் அவருக்கு தன்னுடைய தொப்பியை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தை முன்னிட்டு, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த வீடியோவில் தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்திய பிக் பாஸிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.