அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அருந்தினால் இந்த நோய் வாழ்நாளில் எட்டிக்கூட பார்க்காது?
அதிமதுர நீரை தினமும் பருகினால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உடலில் ஏற்படும்.
அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பர்ஸில் பணம் சேர்ந்துகிட்டே இருக்க இந்த ஒரே ஒரு பொருளை வையுங்கள்!
அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட நீரை அவ்வப்போது அருந்தி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும்.
சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும். இத்தகைய நன்மைகளை கொண்ட அதிமதுர நீரை வைத்து தேநீர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
நவகிரங்களை எந்நாளில் எப்படி வழிப்பட்டால் பலன்களை அடையலாம்?
தேவையான பொருட்கள்
- அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 1 டம்ளர்
- நாட்டு சர்க்கரை - தேவைக்கு
செய்முறை
அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.
கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும். அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம். இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும்.
சளியையும் போக்கும்.