கல்லீரலை பலப்படுத்தும் சக்திவாய்ந்த மூலிகை டீ… யார் யாரெல்லாம் பருகலாம் தெரியுமா?
சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆற்றும் அதிசய சக்தி அதிமதுரத்திற்கு உண்டு.
சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் அதிமதுரம் தடுக்கும்.
எனவே தினமும் இந்த சக்திவாய்ந்த அதிமதுர மூலிகையை உணவில் சேர்த்து கொண்டு அதன் முழு பலன்களையும் பெற்று கொள்ளுங்கள்.
உணவில் சேர்த்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அதிமதுரத்தை தேநீரில் கலந்து குடிக்கலாம்.
சப்பாத்தி இட்லி ஏற்ற சுவையான பருப்பு துவையல் - உடனே செய்வது எப்படி?
அதிமதுர தேநீர் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 1 டம்ளர்
- நாட்டு சர்க்கரை - தேவைக்கு ஏற்ப
செய்முறை
அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.
கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும். அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம்.
இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும்.
