நெல்லிக்காய், அதிமதுரம் எதுக்கெல்லாம் உதவுகின்றது தெரியுமா?
தலைமுடி உதிர்வு மற்றும் தலை முடி வறட்சி வழுக்கை தலை போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு நெல்லிக்காய் மற்றும் அதிமதுரம் ஒரு சிறந்த அருமருந்தாக உள்ளது.
முடி உதிர்வு
தலைமுடி உதிர்வு என்பது பெரும்பாலும் எல்லோருக்கும் உள்ள ஒரு பிரச்சனையாகும். இது ஏற்படுவதற்கான காரணம் போதியளவு ஊட்டச்சத்து இன்மை மற்றும் நச்சு தொற்றுக்கள் போன்ற காரணங்களாகும்.
தலைமுடி வறட்சி ஏற்பட்டால் தலைமுடி வலுவிழக்க தொடங்கி முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இந்த முடி உதிர்வை தடுக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் இதை அதிமதுரம் நெல்லிக்காய் போன்ற பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும்.
முடி உதிர்வு பெரும்பாலும் ரத்தசோகை இருப்பவர்களுக்கு வைட்டமின்கள் குறைவான உணவை சாப்பிடுபவர்களுக்கு
கருத்தடை மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு வரக்கூடும்.
நெல்லிக்காய் அதிமதுரம்
தேங்காய் எண்ணெய்யுடன், நெல்லிக்காய் சேர்த்து தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நிற்கும்.
நெல்லிக்காயில் வைட்டமின் C உள்ளதால், தலைமுடிக்கு சிறந்த ஊட்டச்சத்து கிடைக்கிறது. எனவே நெல்லிக்காய் பொடியை தலைக்கு பயன்படுத்துதல் மிகவும் நல்லது.
அதிமதுரத்தில் ஃபிளவனாய்டுகள் நிறைய உள்ளதால், மிகச்சிறந்த ஊட்டச்சத்து தலைமுடிக்கு கிடைக்கிறது. தலைமுடியின் வேர்க்கால்களை உறுதியடைய செய்யும்.
இந்த அதிமதுரப்பொடியை மாதம் ஒரு முறையாவது தலைக்கு பயன்படுத்துவது நல்லது. இளநரை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் அதிமதுரம் உதவுகிறது.
அதிமதுரத்தை பவுடராக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதை அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் இளநரை மறைய ஆரம்பமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |