வீட்டில் தாங்க முடியாத எலி தொல்லையா? இந்த ஒரு பொருள் போதும்... தலைத் தெறிக்க அலண்டு ஓடும்!
வீட்டில் தாங்க முடியாத எலி தொல்லை. என்ன செய்தும் எலியிடம் இருந்து தப்பிக்க முடிய வில்லையா?
அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. ரொம்ப ரொம்ப ஈஸியா எலியை ஓட ஓட விரட்டலாம்.
தோட்டத்தில் மூஞ்செலி, சின்ன எலி, பெருச்சாளி என்று எந்த வகையான எலியாக இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க ஓடியே போயிடும்.
எலிக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு வாசனை என்றால் அது புதினா வாசம்.
தோட்டத்தில் இருக்கும் எலிகளுக்கு புதினாவின் வாசத்தை வரவழைத்தால் போதும். ஒரு எலி கூட அந்த பக்கம் சுத்தாது.
புதினாவை நடவு செய்வது மிகவும் சுலபம். ஒரு சின்ன தொட்டியில் மண்ணை போட்டு வீட்டுக்கு வாங்கிய புதினா இலையில் இருந்து சில காம்புகளை மட்டும் எடுத்து வந்து நேராக நட்டு வச்சா போதும்.
கொஞ்ச நாளிலேயே துளிர்த்து புதினா இலைகள் முளைக்க ஆரம்பித்துவிடும்.
அந்தத் தொட்டியை வீட்டில் வைத்தாலே போதும். எலிகள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிடும்.