கேம் பிரியர்களுக்காக அட்டகாசமான லுக்கில் வெளிவரப்போகும் Asus Rog Phone 5
இன்றைய நவீன சந்தையில் அடிக்கடி புது புது வகையான ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. அதன் படி Asus நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
வெளிவர போன் ஆன Asus Rog Phone 5s, Rog 5s pro ஆகிய இரு மாடல்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் கேமிங் போன்கள் பிப்ரவரி 15-ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.78 அங்குல முழு அளவு எச்டி+ திரையைக் கொண்டுள்ளது. 144Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவை கொண்ட இந்த இரு ஸ்மார்ட்போன்கள் 12ஜிபி ரேம், 18ஜிபி ரேம் ஆகிய இரு வேரியண்டுகள் உள்ளன.
மேலும், 512 ஜிபி வரை உள்ளடக்க மெமரி ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இரு போன்களும் Snapdragon 888 Plus SoC சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கேமிங் ஸ்கின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் இதன் வடிவமைப்பு இருக்குமாம்.
கேமராவானது, 64 மெகாபிக்சல் முன் கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை கொண்ட டிரிப்பிள் கேமரா அமைப்பை இந்த ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளது.
பின் கேமராவில் 8K தரத்திலான வீடியோக்கள் வரை எடுக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கம் 24 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக பேட்டரி 6000 mAh அல்லது 5800mAh திறனுடன் வெளியாகும் ஊக்குவிக்க 65W ஹைபர் சார்ஜிங் ஆதரவு உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்துடன் கேமர்களுக்கு வசதியாக போனை அவ்வபோது குளிர்விக்கும் தொழில்நுட்பமும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
Comrades of ROG! Extract the lethal upgrades for the Ultimate Gaming Weapon that lay concealed. #CrackTheCode in any of the 3 missions and stand a chance to win the all-new #ROGPhone5s*.
— ASUS India (@ASUSIndia) February 10, 2022
*T&C apply#WorshippedByGamers #LovedByTechGurus #ContestAlert pic.twitter.com/0yccuejsNP