அறிமுகமாகிய Asus 8z ஸ்மார்ட் போன்! என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா?
தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Asus நிறுவனம் கம்ப்யூட்டர், மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை உருவாக்கி வரும் நிறுவனமாகும்.
இந்நிறுவனம் 'Asus 8z' ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021 மே மாத வாக்கில் இந்த போன் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இப்போதுதான் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போனை ஒத்த வடிவில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது,
5.9 இன்ச் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி, ஸ்னாப்டிராகன் 888 SoC, 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள், ரியர் சைடில் இரண்டு கேமரா, அதில் 64 மெகாபிக்சல் சோனி IMX686 பிரைமரி சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் சோனி IMX363 செகண்டரி சென்சார் கேமரா இடம் பெற்றுள்ளது. 12 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது.
4000mAh பேட்டரி, 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன், டைப் சி சார்ஜிங் போர்ட் மாதிரியானவை இதில் இடம்பெற்றுள்ளது. கருப்பு மற்றும் சில்வர் என இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் என தெரிகிறது.
The mighty #ASUS8z is #BigOnPerformanceCompactInSize, combining effortless operation with perfect one-hand usability. Equipped with the powerful Qualcomm® Snapdragon™ 888 & ultra-clear 120 Hz AMOLED display. Sale goes live on 7 Mar, 12PM on @flipkart: https://t.co/d6bxywj7Ql pic.twitter.com/HB7lSI3J05
— ASUS India (@ASUSIndia) February 28, 2022