Astymin Forte Capsule மாத்திரைகள் ஏன் பயன்படுத்தப்படுகிறது?
உடலுக்கு தேவையான விட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்களை வழங்குகிறது Astymin Forte Capsule.
இதன்மூலம் உடல் பலவீனம், சோம்பலை குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதில் அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, சி, டி3 மற்றும் இ நிறைந்துள்ளதால் ரத்தம் ஓட்டம் சீராக நடைபெறும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை நம் உடல் கிரகித்துக்கொள்வதற்கான அமினோ அமிலங்கள் நிறைந்தது Astymin Forte Capsule.
உடலின் ஆக்சிஜன் அளவை ஒழுங்குபடுத்தவும், ரத்த ஓட்டத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சோர்வாக உணர்வதை தடுக்கிறது.
மன அழுத்தத்திலிருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் தூக்கம் தொடர்பான தொல்லைகளில் இருந்தும் காக்கிறது.
உணவு உட்கொண்ட பின்னர் ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை என்ற வீதத்தில் எடுத்துக்கொள்ளலாம், குறிப்பாக காலை வேளையில் எடுத்துக்கொள்வது புத்துணர்ச்சியை கொடுக்கும்.
மாத்திரைகள் பயன்படுத்தும் முன்னர் மருத்துவரின் அறிவுரையை பெறுவது அவசியம், சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.
இதேபோன்று பயன்படுத்தும் முன்னரும் அதில் உள்ள குறிப்புகளை கவனமாக படித்துக்கொள்ளவும்.