கனவில் இது மட்டும் வந்தால் நிஜத்தில் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தமாம்!
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, தூங்கும் போது நாம் காணும் சில கனவுகள் நாம் பணக்காரர் ஆகப் போவதைக் குறிக்கும்.
கனவு அறிவியலின் படி நாம் காணும் சில கனவுகள் எதிர்கால நிகழ்வுகளின் அறிகுறியாகவும் உள்ளன.
சில சமயங்களில் அந்த கனவுகள் நல்லவையாகவோ, சில நேரங்களில் அவை மிகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும்.
இப்போது ஒருவரது கனவில் என்னென்ன விஷயங்களை கண்டால், பணக்காரர் ஆக வேண்டுமென்ற கனவு நனவாகும் என்பதைக் காண்போம்.
விளக்கு
உங்களின் கனவில் விளக்கை காண்பது உங்களைத் தேடி நிறைய பணம் வரப் போகிறது என்பதற்கான அறிகுறி.
காதணி
கனவில் காதணி வந்த நாளில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்களைத் தேடி நிறைய பணம் வரப் போகிறது.
மோதிரம்
நீங்கள் உங்கள் கனவில் மோதிரம் அணிவதைக் கண்டால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கனவில் மோதிரம் வருவது லட்சுமி தேவியின் அருள் உங்கள் மீது உள்ளது என்று அர்த்தம்.
பாம்பு
கனவில் பாம்பு வந்தாலே பலரும் அச்சம் கொள்வதுண்டு. ஆனால் ஒருவரது கனவில் பணம் வைக்கும் பெட்டிக்கு அருகே பாம்பைக் கண்டால், அது பணம் உங்களைத் தேடி வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
தங்கம்
கனவில் தங்கத்தைக் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. தங்கம் லட்சுமி தேவி இருக்கும் பொருளாகும். இந்த தங்கம் ஒருவரது கனவில் வந்தால், அவருக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் உள்ளது என்றும், அவர் விரைவில் பணக்காரர் ஆகப் போகிறார் என்றும் அர்த்தம்.