இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரொம்ப பாவமாம்! ஏன்னு தெரியுமா?
ஜோதிடத்தின்படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கஷ்டத்தினை சந்திக்கும் நிலை ஏற்படுகின்றது. அந்த வகையில் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழ்க்கையில் கஷ்டத்தை எதிர்கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவர்களின் எதிர்காலம், நிகழ்காலம் இவற்றினை ஜோதிடம் ரீதியாக தெரிந்து கொள்ளலாம்.
அதே போன்று பிறந்த தேதி நேரத்தினை வைத்து கணிக்கப்படும் நட்சத்திரம், ராசி இவற்றைக் கொண்டும் ஒருவரது குணாதியங்களை தெரிந்து கொள்ள முடியும்.
சிலரது ராசி, நட்சத்திரத்திற்கு அனைத்து விஷயங்களும் நன்றாக நடைபெறும் நிலையில், சிலருக்கு கஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகின்றது. அந்த வகையில் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் சோதனையை மேற்கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

சதயம்
சதய நட்சத்திரமானது ராகு பகவான் ஆளும் நட்சத்திரமாக இருப்பதால், ராகுவின் தாக்கத்தினால் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை சந்திப்பார்கள்.
தனிமையை அதிகமாக உணரும் இவர்கள், அடிக்கடி மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். ஆனாலும் இவர்கள் புத்திசாலியாக திகழ்வார்கள், எந்தவொரு சிரமத்தை சந்தித்தாலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றியடைவார்கள்.
ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருப்பதுடன், இவர்களுக்கு புதன் அதிபதியாக இருக்கின்றார்.
குடும்ப வாழ்க்கையில் துன்பங்களை சந்திப்பதுடன், நம்பிக்கை துரோக்கத்திற்கும் ஆளாகும் நிலைக்கு செல்வார்கள். கருத்துவேறுபாடு அடிக்கடி ஏற்படும். பிறர் துன்பத்தை சரிசெய்ய சென்று தான் சிக்கலில் சிக்கிக் கொள்வது இவர்களின் வழக்கமாகும்.

பரணி
பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக இருப்பவர்கள் சுக்கிரன் ஆவார். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் இவற்றிற்கு காரணமாக இருந்தாலும், இந்த நட்சத்திரத்தினர் வாழ்க்கையில் கடுமையான சோதனையை மேற்கொள்ளவும் செய்வார்கள்.
கடின உழைப்பிற்கு மட்டும் பலனை அடையும் இவர்களுக்கு, பொறுப்புணர்வு, கடமை உணர்ச்சி அதிகமாக இருக்கும். எந்தவொரு பொருளும் இவர்களுக்கு எளிதில் கிடைக்காது. சிறிய விடயத்திற்கு கூட அதிகம் போராடும் சூழ்நிலை ஏற்படும். ஆக மொத்தம் அதிர்ஷ்டம் என்பது குறைவாகவே இருக்கும்.
கேட்டை
கோட்டை நட்சத்திரத்தினை புதன் ஆட்சி செய்யும் நிலையில், சிறு வயதிலிருந்து பெரிய பொறுப்புகளை எதிர்கொள்வார்கள். குடும்ப பாரத்தினை சிறுவயதிலிருந்தே சுமக்கும் இவர்கள், தனக்கென வாழாமல் மற்றவர்களுக்காக இருப்பார்கள்.
கடுமையான உழைப்பாளியான இவர், வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களையும், கஷ்டங்களையும் இவர்கள் சந்திப்பார்களாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |