Rama Navami : இன்று இந்த பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டமாம்
சைத்ர நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமி திதியில் ராம நவமி கொண்டாடப்படும் நிலையில், இன்று எந்தெந்த பொருட்களை வாங்கிவைத்தால், மங்களகரமானதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ராம நவமி
சாஸ்திரப்படி ராம நவரி அன்று சில பொருட்களை வாங்கி வைப்பதால் வீட்டில் அதிர்ஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
மார்ச் 26, 27 அதாவது இன்றும், நாளையும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஏனெனில் இந்த நாளில் தான் ராமர் பிறந்தார் என்று நம்பப்படுவதால் ராம நவமி என அழைக்கின்றனர்.
மஞ்சள் நிற பொருட்களை வீட்டிற்கு கொண்டுவருவது மிகவும் மங்களகரமாக பார்க்கப்படுகின்றது. மஞசள் நிறத்தில் உள்ள ஆடைகள், சந்தனம், தங்கம் மற்றும் இனிப்புகள் என மஞ்சள் நிற பொருட்களை வாங்கலாம். ஸ்ரீராமருக்கு பிடித்த நிறம் மஞ்சள் ஆகும்.

வெள்ளியும் வாங்கலாம்
ராம நவரி அன்று வெள்ளி பொருட்களை வீட்டிற்கு கொண்டுவருவதும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. இந்த நாளில் வெள்ளி வாங்கினால் மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பதுடன், ராமரின் ஆசீர்வாதம் எப்பொழுதும் கிடைக்குமாம்.
பூஜை பொருட்களும் இந்த நேரத்தில் வாங்கலாம், மாமரக் கட்டைகள், சந்தனம், பசுநெய், அரச இலை, பஞ்சமேவா(ஐந்து உலர்பழங்களின் கலவை), கிராம்பு, ஏலாக்காய் என்ற பொருட்களையும் வாங்கலாம்.

இன்று ராம நவனி என்பதால் ராம தர்பார் படத்தினை வாங்கி வைப்பதும் குடும்பத்தில் அன்பு, ஒற்றுமை அதிகரிக்கின்றது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |